வியாழன், 22 மே, 2014

புத்தாடை

நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண். எங்கள் பெற்றோர் எந்த குறையும் இல்லாமல் அவசியமான தேவையான அனைத்தையும்  தந்து வளர்த்தார்கள். அப்பா மாத வருமானத்தில்  எங்களின் படிப்பு, குடும்ப தேவை , வீட்டு  வாடகை, ஊருக்கு தேவையான செலவுஅனைத்தும் அடங்கும்.  புத்தாடை என்பது இப்பொழுது போல் நீனைத்தால் எடுக்க முடியாது. வருடத்திற்கு இரண்டு முறை தான் அதுவும் ஒன்று பிறந்தநாளிற்கு மற்றொண்டு தீபத்திருநாள் தீபாவளி அன்று. அப்பா அம்மா சென்று எடுத்து வருவார்கள். அவர்கள் எடுத்து வரும் ஆடைகள் எல்லாம் மிகவும் அழகாக, நேர்த்தியாக மற்றும்  புதுமையாக இருக்கும்.

பெற்றோர்கள் எங்களை  (நான் மற்றும் சகோதரர்களும்) பள்ளிக்கு சென்ற பின் கடைக்கு புத்தாடை எடுக்க செல்வார்கள் .  அல்லது பள்ளியில் இருந்து வந்தவுடன்  எங்களுக்கு தேவையான் உணவுகளை தந்தபின் வீட்டில்  பூட்டிவிட்டு செல்வர்கள். மறக்காமல் சாவியை தந்துவிட்டு செல்வர்கள். தேவைபட்டால் திறந்துகொள்ள . வீட்டில் பெரிய ஜன்னல் உண்டு அதில்  கால்களை தொங்கவிட்டுக்கொண்டு கதை பேசுவோம். அவர்கள் என்ன ஆடை எடுத்து வருவார்கள் என்ற ஆவல் மிகவும் அதிகமாக இருக்கும்.

ரெடிமேட் அடிகள்  துணி எடுத்து வரமாட்டார்கள் . துணி எடுத்து  தைப்பது தான் வழக்கம். அந்த ஆடைகள் தைத்து வரும் வரை நிம்மதி இருக்காது. பலநேரம் என்னது ஆடை தைத்து வருவது மிகவும் தாமதமாகும். அம்மாவிடம் அழுது ஆர்பாட்டம் பண்ணுவேன்  ஏன் அம்மா என்னக்கு மட்டும் இப்படி என்று.

மிகவும் மறக்க முடியாதது ஒருமுறை பிறந்தநாள் முன்னிட்டு மிடி தைக்க குடுத்தது இரவுவரை வரவில்லை. அம்மா விடம் எல்லா விதத்திலும் சண்டை போட்டுவிட்டு உன்னக்கு உன்னோட பையன் தான்  முக்கியம் நான் இல்லை என்னக்கு எதுவும் செய்ய மாட்டீர்கள் என்று அழுதுகொண்டே தூங்க சென்றேன். புது டிரஸ் இருந்தால் தானே பிறந்தநாள் அதுவே இல்லை என்றால்  என்ன செய்வது?

அழுது வீங்கிய முகத்துடன் எழுந்து  காலைகடன் முடிந்த பின் குளித்துவிட்டு பள்ளி செல்ல ஆயதம் ஆனேன்  . அம்மா கலை எழுந்தவுடன் சொன்ன பிறந்தநாள் வாழ்த்தை தேங்க்ஸ் என்று வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்டேன் . அம்மா சாமி கும்பிட அழைத்தார்கள் . அங்கே சாமி படம் முன்பு புதிய மிடி மற்றும் சாக்லேட் .இருந்தது. அந்த நொடியில் நான் அடைந்த சந்தோஷம் இப்பொழுது அப்பா அம்மா வாங்கித்தரும் டப் அல்லது வீடியோ கேம்ஸ்- ஐ வாங்கிகொள்ளும் குழந்தையிடம் பார்க்க முடியாது உங்கள் குழந்தை  உங்களிடம் அப்பா என்னோட நண்பன் இன்னும் லேட்டஸ்ட் வேர்சின் வச்சு இருக்கான் என்று சொல்வார்கள் ஏன் என்றால் பெற்றோர்களே போதும் என்ற எண்ணத்தில் இல்லை அனைத்திற்கும் அதிகமாக ஆசைப்பட்டு அதை நீறைவேற்றி கொள்ள அதிகமகா  போராடுகிறார்கள் பின்பு குழந்தை எப்படி திருப்தி அடையும் :-). நீங்கள் தான் உங்கள் குழந்தைக்கு சரியான வழிகாட்டி.

புத்தாடை அணிந்து, வாங்கி வைத்த எச்ளைர்ஸ் சாக்லேட் அனைவருக்கும் வீட்டிற்கு சென்று தருவது தான் வழக்கம் . அதனால் அருகில் இருக்கும் நண்பர்களும் குடும்பம் போல் பழகினோம். இப்பொழுது அனைவரையும் வீட்டிற்கு அழைத்து பார்ட்டி குடுப்பது வழக்கம் ஆகிவிட்டது. அது கொடுக்கவில்லை என்றால் குழந்தை மனசு கஷ்டப்படும். எங்கள் தேவை எங்களுக்கு (எங்கள் தலைமுறைக்கு) உணர்த்தப்பட்டு வளர்தோம் . அதனால் வாழ்க்கையை துணிவோடு எதிர்கொன்றோம். ஏன் எப்போது அப்படி இல்லை. பிள்ளைகள் தோற்றால் பெற்றோர்கள் அழுது இயலாமை வெளியாகின்றது.

தீபாவளி வருகின்றது என்றால் சந்தோஷம் தான் அம்மா ஒருவாரம் முன்பே பலகாரம் செய்ய தொடங்குவார்கள் . அனைத்தும் அவ்வளவு ருசியாக இருக்கும் தினமும் பள்ளியில் இருந்து வரும்பொழுது ஒரு பலகாரம் செய்வார்கள். முறுக்கு, அதிரசம், ஒமபொடி , ஹல்வா, குலப்ஜமுன், முந்தரி கேக், ....... அப்பா ஆபீஸ்-இல் சீட்டு கட்டி இருப்பார்கள் அதனால் வெடிக்கு பஞ்சம் கிடையாது, மிக முக்கியம் ஆனது புத்தாடை. அதை அப்பா தையல் அங்கிள் இடம் இருந்து வாங்கி வருவார்கள். காலை 4 மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்துவிட்டு அப்பா தான் எங்களை குளிக்க செய்வார்கள். அம்மா இட்லி சாம்பார், பஜ்ஜி, சட்னி எல்லாம் செய்வார்கள்.

அவ்வளவு சந்தோஷமாக கொண்டாடினோம் பெரியவர்கள் ஆனவுடன் அனுபவித்து போதும் என்று வெடி அசை நின்று போனது. அனைத்தையும் நாம் அனுபவித்து, திருப்தி அடைந்து, உணர்த்து நிறுதிகொள்வது ஒரு நல்ல அனுபவம் (நல்ல விஷயங்களில்). இரண்டு ஆடை கொடுத்த சந்தோஷம் நீனைத்தால் சென்று ஆடை எடுப்பதில் நிஜமாக இல்லை தான். வருடம் முழுவதும் எதாவது தள்ளுபடி இருக்கத்தான் செய்கிறது.

எதுவும் அளவுக்கு அதிகமாக இருந்தால் அதன் அருமை தெரியாது. சிறிது இருந்தாலும் சந்தோஷமாக இருந்தகாலம் போய்விட்டது . பதினைத்து வருடங்கள் முன்பு நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றியகாலம் போய் இப்பொழுது நாம் செய்யும் தொலைபேசியை கூட எடுத்து ஒரு ஹலோ சொல்ல நேரம் இல்லை. வாழ்கையை  உன்னர்த்த நாமே இப்படி ஆகிவிட்டோம் அடுத்த தலைமுறை பற்றி சொல்லவே வேண்டாம். உங்களை தொலைத்து உங்களின் தேவையை நோக்கி ஓடாதீர்கள் 

வியாழன், 13 பிப்ரவரி, 2014

அம்மா பாட்டி வீடு - பகுதி 3


பாட்டி வீட்டின் தோட்டம் சற்று பெரியது. அதில் கருவேப்பிலை மரம், வேப்பம் மரம், மாமரம், நர்த்தம் மரம் என்று பல வித மரங்கள் உண்டு. மதிய நேரம் பாட்டியின் அறுசுவை உணவை உண்ட பின் வேப்பமர நிழலில் அமர்வது ஒரு தனி சுகம். பக்கத்தில் பானை செய்யும் குயவர்கள் வீடு அதனால் எப்பொழுதும் ஏதாவது வேலை  செய்து கொண்டே இருப்பார்கள். அந்த ஓசையும் குளுமையான
காற்றும் நம்மை தாலாட்டி தூங்க வைத்துவிடும்.
என் நாண்பன் ஒரு வலைத்தளத்தில் குறிப்பிட்டது போல் எங்கள் தலைமுறை தான் மிகவும் உலக வாழ்வை ரசித்து , அனுபவித்து , சுவைத்து ,மகிழ்ந்த, உணர்வு பூர்வமாக கற்றுக்கொண்ட  தலைமுறை.


அந்த ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து அம்மா என்று பசு மற்றும் எருதின் குரல் உங்களை எழுப்பும், இல்லை என்றால்  தாத்தா பால் கரக்க செல்லும் ஒலி கட்டாயம் எழுப்பிவிடும் . தாத்தா பால் கறக்கும் அழகை ரசிக்க தோன்றும் . முதலில் பசுவிற்கு குடிபதற்கு கழனி தண்ணி வைத்து விட்டு கன்றினை பால் குடிகவிடுவார்கள் அது குடித்த பின் மாட்டின் பால் சுரக்கும் காம்பினை நன்றாக கழுவி, விளக்கெண்ணை காம்பில் தடவி, பின் வீரல்களால் நீவி பாலை பால் படியில் கறப்பார்கள். ஒருமுறை நானும் முயன்றேன் ஆனால் முடியவில்லை . என்னது அம்மா, பாட்டி , சித்தி , தாத்தா அழகாக பால் கறக்கும் பொழுது  எனக்கு கோவமாக வரும்.
அந்த பாலை அப்படியே குடித்தாலும் சுவையாக இருக்கும் (நான் அதை சுவைத்து இருக்கேன் ). பாட்டி பாலினை பித்தளை சட்டியில் ஊற்றி விறகு அடுப்பில் நல்ல தீயில் தண்ணீர் விடாமல் காய்ச்சி குடிபதற்கு தருவார்கள் அவ்வளவு சுவை இன்னும் அந்த சுவை நீனைவிலும், நாக்கிலும் இனிக்கின்றது . விடுமுறை முடிந்து வந்தால் நம்மை ஆவின் பால் வரவேற்கும் :-)
மாலை தேநீர் நீரம் முடிந்ததும் பாட்டி  எதாவது வேலை தருவார்கள் . ஆடுக்கல்லில் கட்டாயம் இட்லி மாவு அரைக்கும் பணி இருக்கும் . நான் குழவியை சுற்றினால் பாட்டி மாவினை தள்ளி விடுவார்கள் . சிறிது நேரம் உதவிவிட்டு பாட்டியிடம் ரொம்ப கைவலிக்குது பாட்டி என்றும் அழுது எழுந்து சென்றுவிடுவேன் . என் பாட்டி ஆயிற்றே என்னை பற்றிய தெரியாது அடுத்த வேலை கொடுப்பார்கள் . சின்ன குட்டி (பாட்டி, தாத்தா செல்லமாக வேலை  வாங்கும் அழகில் இதுவும் ஒன்று ) தண்ணி எடுத்துகிட்டு போய் வாசல் தெளித்து அழகாய் கோலம் போடுவியாம் என்பார்கள் அவர்களிடம் என்ன சண்டையா போட தோன்றும் ! சரி பாட்டி என்று உற்சாகமாக செல்வேன்.
நான் வீடுமுறைக்கு சென்றால் தாத்தா பொட்டலம் வாங்கிவர டவுனுக்கு கட்டாயம் செல்வார்கள் . பாட்டி இருட்டும் வேளை வந்ததும் சுவாமிக்கு வீளக்கு ஏற்றிவிட்டு என்னிடம் பிள்ளையார் கோவிலுக்கு எண்ணெய் கொடுத்து அனுப்புவார்கள் , ஓடி சென்று பிள்ளையார் கோவிலில் விளக்கு ஏற்றியவுடன் பாட்டி வீட்டு வாயிலில் நின்று பிள்ளையாரை கும்பிடுவார்கள் . நான் வீளக்கு போட்டு விட்டு ஐய்யர்  வீட்டு பாட்டியுடன் சிறிது பேசிவிட்டு வீட்டுக்கு வருவேன் .
பாட்டி திண்ணையில் அமர்ந்து இருப்பார்கள். யாராவது உறவினர்கள் வந்தால் திண்ணை நீரினது இருக்கும். நான் தாத்தாவின் பொட்டலத்திற்காக காத்திருப்பேன் . தாத்தாவின் டிவிஎஸ் 50 சத்தம் கேட்டவுடன்  வாசலுக்கு வரவேற்க சென்று விடுவேன் . நான் மட்டும் வீட்டில் இருந்தால் கவலை இல்லை எல்லாம் எனக்கு மட்டும் . என்னுடன் எப்பொழுதும் சண்டை போடும் என் மாமா பயன் இருந்தால் யுத்தம் நடக்கும்(அவற்றை பின்னால் பகிர்வேன் ).
வாங்கி வந்த திண்பண்டங்கள் முடிந்தபின் திண்ணையின் முன் இருக்கும் மணல் பரப்பில் இருக்கும்  தாத்தாவின் கட்டிலில் படுத்துக்கொண்டு வானத்தை பார்த்துகொண்டு வேம்பின் காற்றில் படுத்துக்கொண்டு தாத்தா பாட்டியின் உரையாடலை ரசித்தபடி இருப்பேன்.
இன்றைய பொழுதுபோல் நாளை கட்டாயம் இருக்காது.


வியாழன், 16 செப்டம்பர், 2010

அம்மா பாட்டி வீடு - பகுதி 2

பாட்டி வீட்டின் தோட்டம் சற்று பெரியது. அதில் கருவேப்பிலை மரம், வேப்பம் மரம், மாமரம், நர்த்தம் மரம் என்று பல வித மரங்கள் உண்டு. மதிய நேரம் பாட்டியின் அறுசுவை உணவை உண்ட பின் வேப்பமர நிழலில் அமர்வது ஒரு தனி சுகம். பின்புற வேப்பமரம் சற்று பெரியது அதனால் நல்ல சுகமான காற்று வரும். சில நேரம் பின் தாவரத்தில் உறங்கியதும் உண்டு. பாட்டி தினமும் காலை வீட்டில் இருந்து கிணற்று அடி செல்லும் பாதையை மாட்டு சாணம் கரைத்து தெளிப்பார்கள் (இயற்கை கிருமி நாசினி :-)). காலை சாணம் தெளித்த தரை பார்பதற்கு இளம் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும்.
கருவேப்பிலை மரம் ஏறுவது தான் எளிது, அது நல்ல வாட்டமாக ஏறுவதற்கு வளைந்து இருக்கும்.

நான் பாட்டி வீட்டில் இருக்கும் பொழுது காலை எழுவதற்கு மனமே இருக்காது. பாட்டியின் திட்டு, ராகம் மாதிரி இருக்கும் (பெண் பிள்ளை இவ்வளவு நேரம் தூங்ககூடாது, எப்போ காலை உணவு அருந்துவது, ......) வேறு வழி இல்லாமல் எழுந்து வரவேண்டும்.
மெதுவாக பின்கட்டை ரசித்து கொண்டே துணி துவைக்க பெரிய கருங்கல் ஒரு மேடையில் போட்டு இருக்கும் அதில் அமர்ந்து பின்புறம் உள்ள வயல், முள்வேலிக்கு அடுத்து இருக்கும் குயவர் வீடு, அங்கு அவர்கள் களிமண் பிசையும் விதம், சக்கரத்தை சுற்றி அழகாக பானை அல்லது சட்டி செய்வதை ரசித்து, மகிழுந்து பல் துலக்கி முடிவதற்குள் பாட்டி சுடுநீர் வைத்திருப்பார்கள்.
தாத்தா அதற்குள் குளித்து நீரில் நனைத்து பிழிந்த துணியை இடுப்பில் கட்டி கொண்டு செம்பரதம் செடியில் இருந்து சிவப்பு செம்பரதம் பறித்து கொண்டு இருப்பார்கள் (என்றாவது நான் அதிகாலை எழுந்து நீராடி இருந்தால் நானும் தாத்தாவுடன் பூ பறிப்பது உண்டு). நான் மிக விரைவாக நீராடி முடித்து பூஜை முடிப்பதற்குள் சென்று அமர்ந்து விடுவது என்னுடைய பழக்கம்.
பூஜை முடிந்த பின் பாட்டியின் சூடான பலகாரம் தயாராக இருக்கும். அது பெரும்பாலும் பஞ்சு போல் இருக்கும் இட்லி, தேங்காய் சட்னி அல்லது சாம்பார், அன்று காலை தயிரில் கடைந்த வெண்ணை, கட்டி தயிர்.
காலை உணவு முடிந்த பின் பாட்டி ஏதேனும் எனக்கு வேலை தருவார்கள்.
இன்னும் பயணம் செய்வோம் மகிழ்ச்சியுடன் .......

திங்கள், 19 ஜூலை, 2010

நண்பனின் கவிதை - 2

உனக்காக கவிதை கேட்டேன் தோழி
வானம் மழை தந்தது
மண் வாசம் தந்தது
இந்த நேசம் உன் நட்பு தந்தது
இன்னும் நீ வளர என்றும் வாழ்த்தும் நண்பன்

நண்பனின் கவிதை - 1

நான் மரணகளுக்கு கவிதை வசிப்பதில்லை
உன் கல்லறைக்கு
என் கவிதைகளை சுமந்துவராது என் தாள்கள்
வாசிக்க நீயில்லாத போது வரிகளுக்கு அங்கு என்ன வேலை
மறக்க வேண்டிய நினைவுகளும்
மறக்க முடியாத நினைவுகளும்
மறக்க கூடாத நினைவுகளுமாய்
சுவாசிக்க உன் நினைவுகளை எடுத்துக்கொண்டு
மௌனங்களை மொழியாக்கிவிட்டு வந்துவிடுவேன் தோழி.

வெள்ளி, 9 ஜூலை, 2010

அம்மா பாட்டி வீடு - பகுதி 1

காட்டுமன்னார் கோவில் என்னும் ஊரில் இருந்து சில மைல் தொலைவில் உள்ளது அம்மாவின் பிறந்த ஊர். ஊருக்கு செல்லும் வழி மிகவும் அழகாக இருக்கும். சாலையின் ஒரு புறம் வடவாறு மறுபுறம் தென்னம் தோப்பு, வயல்வெளி, ஊரின் அம்மன் கோவில் நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் .

ஊரின் பேருந்து நிறுத்தம் ஒரு பெரிய புளிய மரம். பாட்டி வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு அழகிய பெரிய செந்தாமரை குளம், நீரோடை, தென்னம் தோப்பு, பிள்ளையார் கோவில் உள்ளது.

வருடம் முழுதும் படித்து களைத்து செல்லும் ஒரு அழகிய இடம். இப்பொழுது இருக்கும் சிறுவர்கள் இழக்கும் ஒன்று.



பாட்டி வீடு பெரியதாக இருக்கும் (எனக்கு) . முன்பக்கம் அழகிய சிமெண்ட் வளைவுடன் கூடிய நடைபாதை அதன் இருபுறமும் மணல் பரப்பு ஒருபுறம் மாடு தண்ணீர் குடிக்கும் சிமெண்ட் தொட்டி. வீட்டிற்கு ஒருபுறம் பெரிய வேப்பமரம் மறுபுறம் மஞ்சள் சரகொன்றை மரம் . இரவில் அந்த வேப்பமர காற்றின் மணம் மற்றும் சுகம் தனி கயிற்று  கட்டிலில் படுத்து கொண்டு பலநாட்கள் அதை நாங்கள் அனுபவித்து உள்ளோம் ( டவுனில் தாத்தா வாங்கிவரும் சூடான பலகரதுடன்).


நடைபாதையில் இருந்து இரண்டு படி ஏறினால் நீண்ட சிமெண்ட் திண்ணை (மர தூண்களுடன்) அதில் அமர்ந்து அம்மா,தாத்தா, பாட்டி நீண்ட நேரம் பேசுவார்கள் . திண்ணையின் முன்பு தாவாரம் , அதின் ஒரு புறத்தில் சிறிய வளைவுடன் கூடிய சந்திற்குசெல்லும் வாயில் மற்றும் மிகப்பெரிய வேலைப்பாடு கொண்ட நுழைவாயில்.



உள்ளே சென்றால் ஒரு அறையில் நெல்லை வைக்கும் தொம்பை மற்றும் இடதுபுறம் பெட்ரூம். பெரிய வரவேற்பறையின் ஒருபக்கம் மாடிக்கு செல்லும் படிக்கட்டு, பெரிய மரஊஞ்சல் ஆடுவதற்கு வசதியாக இருக்கும் (இப்பொழுது நான் இருக்கும் என் இனிய இல்லத்தின் வரவேற்பு, சாப்பாட்டு மற்றும் சமையல் இடம் சேர்த்தல் இந்த இடம் :-) ). சித்தியின் திருமண வரவேற்பு இந்த வரவேற்பு அறையில் தான் நடந்தது என்பார்கள்.



வரவேற்பறை முடிந்தவுடன் ஒரு சிறிய தாவாரம். அதன் இடதுபுறம் பாத்திரம் மற்றும் சாமி இருக்கும் இடம். உள்ளே சென்றால் வாசலுடன் கூடிய அடுப்பறை. ஒருபக்கம் விறகு அடுப்பு, மற்றும் ஒரு பக்கம் தயிர் கடையும் பானை. வாசலின் (தொட்டி போன்ற அமைப்பு ) விளிம்பில் ஒரு மேடை, மறுபக்கம் மாவு அரைக்கும் கல், மற்றும் ஒரு புறம் அம்மி



வாசலின் வழி இயற்கையான சூரிய வெளிச்சம் உள்ளே வரும். இதை கடந்தால் ஒரு சிறிய தாவாரம் அதில் சுவர் ஓரம் இரண்டு மண் அடுப்பு (இதில் தான் பாட்டி இடியப்பம் மாவு, வடகம் செய்ய கூழ் தயார் செய்வார்கள்).

இன்னும் காண்போம்.......