திங்கள், 19 ஜூலை, 2010

நண்பனின் கவிதை - 2

உனக்காக கவிதை கேட்டேன் தோழி
வானம் மழை தந்தது
மண் வாசம் தந்தது
இந்த நேசம் உன் நட்பு தந்தது
இன்னும் நீ வளர என்றும் வாழ்த்தும் நண்பன்

நண்பனின் கவிதை - 1

நான் மரணகளுக்கு கவிதை வசிப்பதில்லை
உன் கல்லறைக்கு
என் கவிதைகளை சுமந்துவராது என் தாள்கள்
வாசிக்க நீயில்லாத போது வரிகளுக்கு அங்கு என்ன வேலை
மறக்க வேண்டிய நினைவுகளும்
மறக்க முடியாத நினைவுகளும்
மறக்க கூடாத நினைவுகளுமாய்
சுவாசிக்க உன் நினைவுகளை எடுத்துக்கொண்டு
மௌனங்களை மொழியாக்கிவிட்டு வந்துவிடுவேன் தோழி.

வெள்ளி, 9 ஜூலை, 2010

அம்மா பாட்டி வீடு - பகுதி 1

காட்டுமன்னார் கோவில் என்னும் ஊரில் இருந்து சில மைல் தொலைவில் உள்ளது அம்மாவின் பிறந்த ஊர். ஊருக்கு செல்லும் வழி மிகவும் அழகாக இருக்கும். சாலையின் ஒரு புறம் வடவாறு மறுபுறம் தென்னம் தோப்பு, வயல்வெளி, ஊரின் அம்மன் கோவில் நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் .

ஊரின் பேருந்து நிறுத்தம் ஒரு பெரிய புளிய மரம். பாட்டி வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு அழகிய பெரிய செந்தாமரை குளம், நீரோடை, தென்னம் தோப்பு, பிள்ளையார் கோவில் உள்ளது.

வருடம் முழுதும் படித்து களைத்து செல்லும் ஒரு அழகிய இடம். இப்பொழுது இருக்கும் சிறுவர்கள் இழக்கும் ஒன்று.



பாட்டி வீடு பெரியதாக இருக்கும் (எனக்கு) . முன்பக்கம் அழகிய சிமெண்ட் வளைவுடன் கூடிய நடைபாதை அதன் இருபுறமும் மணல் பரப்பு ஒருபுறம் மாடு தண்ணீர் குடிக்கும் சிமெண்ட் தொட்டி. வீட்டிற்கு ஒருபுறம் பெரிய வேப்பமரம் மறுபுறம் மஞ்சள் சரகொன்றை மரம் . இரவில் அந்த வேப்பமர காற்றின் மணம் மற்றும் சுகம் தனி கயிற்று  கட்டிலில் படுத்து கொண்டு பலநாட்கள் அதை நாங்கள் அனுபவித்து உள்ளோம் ( டவுனில் தாத்தா வாங்கிவரும் சூடான பலகரதுடன்).


நடைபாதையில் இருந்து இரண்டு படி ஏறினால் நீண்ட சிமெண்ட் திண்ணை (மர தூண்களுடன்) அதில் அமர்ந்து அம்மா,தாத்தா, பாட்டி நீண்ட நேரம் பேசுவார்கள் . திண்ணையின் முன்பு தாவாரம் , அதின் ஒரு புறத்தில் சிறிய வளைவுடன் கூடிய சந்திற்குசெல்லும் வாயில் மற்றும் மிகப்பெரிய வேலைப்பாடு கொண்ட நுழைவாயில்.



உள்ளே சென்றால் ஒரு அறையில் நெல்லை வைக்கும் தொம்பை மற்றும் இடதுபுறம் பெட்ரூம். பெரிய வரவேற்பறையின் ஒருபக்கம் மாடிக்கு செல்லும் படிக்கட்டு, பெரிய மரஊஞ்சல் ஆடுவதற்கு வசதியாக இருக்கும் (இப்பொழுது நான் இருக்கும் என் இனிய இல்லத்தின் வரவேற்பு, சாப்பாட்டு மற்றும் சமையல் இடம் சேர்த்தல் இந்த இடம் :-) ). சித்தியின் திருமண வரவேற்பு இந்த வரவேற்பு அறையில் தான் நடந்தது என்பார்கள்.



வரவேற்பறை முடிந்தவுடன் ஒரு சிறிய தாவாரம். அதன் இடதுபுறம் பாத்திரம் மற்றும் சாமி இருக்கும் இடம். உள்ளே சென்றால் வாசலுடன் கூடிய அடுப்பறை. ஒருபக்கம் விறகு அடுப்பு, மற்றும் ஒரு பக்கம் தயிர் கடையும் பானை. வாசலின் (தொட்டி போன்ற அமைப்பு ) விளிம்பில் ஒரு மேடை, மறுபக்கம் மாவு அரைக்கும் கல், மற்றும் ஒரு புறம் அம்மி



வாசலின் வழி இயற்கையான சூரிய வெளிச்சம் உள்ளே வரும். இதை கடந்தால் ஒரு சிறிய தாவாரம் அதில் சுவர் ஓரம் இரண்டு மண் அடுப்பு (இதில் தான் பாட்டி இடியப்பம் மாவு, வடகம் செய்ய கூழ் தயார் செய்வார்கள்).

இன்னும் காண்போம்.......